ஒரு உயிரை காப்பாற்றும் பொருட்டு நோன்பை துறந்த இஸ்லாமியர்


ஒரு உயிரை காப்பாற்றும் பொருட்டு  நோன்பை துறந்த  இஸ்லாமியர்
x
தினத்தந்தி 26 May 2018 8:44 AM GMT (Updated: 26 May 2018 8:44 AM GMT)

8 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றும் பொருட்டு நோன்பை துறந்த இஸ்லாமியர்

பாடனா

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் எனும் இடத்தில் ராஜேஷ் எனும் சிறுவன் தலசீமியா எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். 

இவனுக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது, இச்சிறுவனின் ரத்தம் அரியவகை என்பதால் ரத்தம் கிடைக்காமல் மருத்துவர்கள் திண்டாடினர்.

இதனையடுத்து அன்வர் ஹுசேன் எனும் ரத்த தான குழு தலைவரை மருத்துவர்கள் நாடினர். சிறுவனின் அரிய வகை ரத்தமும் ஜாவேத் ஆலம் என்பவரின் ரத்தமும் ஒரேவகை என்று தெரிய வந்தது.

இதனையடுத்து ஜாவேத் ஆலமிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரமலான் மாத நோன்பு வைத்திருந்தால் ரத்தம் சிந்த கூடாது என்பது இஸ்லாமிய மதக் கோட்பாடு. 

அப்படி செய்தால் நோன்பு முறிந்து விடும் என்பது விதி, இருப்பினும் இந்த விதிகள் தெரிந்திருந்தும் ஆலம் சிறுவன் ராஜேஷின் உயிரை காப்பாற்றுவதற்காக ரத்தம் தானம் செய்துள்ளார்.

இவரின் ரத்த தானத்தால் சிறுவன் உயிர் காப்பாற்றப்பட்டது. இதன்பின் பேசிய ஆலம் , இஸ்லாம் சகா மனிதர்களை நேசிக்கவே சொல்லியிருக்கிறது. 

மற்றவருக்கு உதவுவதே இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய நோக்கம். உயிருக்கு போராடும் ஒரு சிறுவனை காக்க என் நோன்பை நான் முறித்தது தவறில்லை என்றே எனக்கு படுகிறது என்று கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.

Next Story