சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றொரு பாரதீயஜனதா எம்.எல்.ஏவும் சிக்கினார்


சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றொரு பாரதீயஜனதா எம்.எல்.ஏவும் சிக்கினார்
x
தினத்தந்தி 30 May 2018 5:18 AM GMT (Updated: 2018-05-30T10:48:30+05:30)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக உத்தரபிரதேசத்தில் மற்றொரு பாரதீய ஜனதா எம்.எல்.ஏவும் சிக்கி உள்ளார். #BJP

லக்னோ

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிற உத்தரபிரதேச மாநிலத்தில் 18 வயது பெண் ஒருவர் கும்பலால் பாலியல்  பலாத்காரத்திற்கு ஆளானார். இது தொடர்பாக . பங்கார்மாவ் தொகுதி  ஆளும் கட்சி எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு போடப்பட்டு உள்ளது.

தற்போது உத்தரபிரதேசத்தில் மற்றொரு எம். எல்.ஏ. மீதும் பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்டு உள்ளது.வேலைகாரரின் மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் பாலியல் பலத்காரம் செய்து உள்ளார்.பதயுன் மாவட்டத்தில் உள்ள பிஸ்ஸாவுலி தொகுதி எம்.எல் ஏ குஷாகரா சாகர் மீது பாதிக்கப்பட்ட பெண்  புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து அந்த பெண்  நான் சமுதாயத்தில் கேலிக்குரிய ஒரு விஷயமாகிவிட்டேன், எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி உள்ளார்.

மேலும் அந்த பெண் கூறும் போது  சாகரின் தந்தை முன்னாள் எம்.எல்.ஏ  யோகேந்திர சாகர்  தனது மகனை எனக்கு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தார். பின்னர்  இந்த விஷயத்தை முடித்துகொள் என கூறி எனக்கு ரூ. 20 லட்சம் தருவதாக கூறி உள்ளார். என அந்த சிறுமி கூறி உள்ளார்.

என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என கூறினார்.

எம்.எல்.ஏ சாகருக்கு  ஜூன் 17 ந்தேதி திருமணம் நடைபெறப்போவதாக அறிந்தபோது அந்த பெண்  புகார் அளித்து உள்ளார்.

போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story