டெல்லி குடோனில் 2வது நாளாக எரியும் தீயை அணைக்க இந்திய விமான படை ஹெலிகாப்டர் சென்றது


டெல்லி குடோனில் 2வது நாளாக எரியும் தீயை அணைக்க இந்திய விமான படை ஹெலிகாப்டர் சென்றது
x
தினத்தந்தி 30 May 2018 6:30 AM GMT (Updated: 2018-05-30T12:00:59+05:30)

புதுடெல்லியில் மாளவியா நகரில் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் இன்று சென்றுள்ளது.

புதுடெல்லி,

புதுடெல்லியில் மாளவியா நகரில் குடோன் ஒன்றில் நேற்று மாலை பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  தீயை அணைப்பதற்காக 16 தீயணைப்பு வாகனங்கள் சென்றன.  எனினும் தீயை எளிதில் அணைக்க முடியவில்லை.  இதனால் ஏற்பட்ட புகை நீண்ட நேரம் பரவியது.

இதனை தொடர்ந்து இந்திய விமான படையின் மி 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து தீயை அணைப்பதற்காக இன்று புறப்பட்டு சென்றுள்ளது.  இந்த ஹெலிகாப்டரில் பாம்பி என்ற சிறப்பு பக்கெட் உள்ளது.  இதில் இருந்து வான்வழியே நீர் தெளிக்கப்படும்.  அதனை அடுத்து தீ அணைக்கப்படும்.


Next Story