கேரள மாநில பழங்கள், காய்கறிகள் இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை


கேரள மாநில பழங்கள், காய்கறிகள் இறக்குமதிக்கு  ஐக்கிய அரபு அமீரகம் தடை
x
தினத்தந்தி 30 May 2018 1:35 PM GMT (Updated: 2018-05-30T19:05:32+05:30)

நிபா வைரஸ் பரவுவதால், கேரள மாநில பழங்கள், காய்கறிகள் இறக்குமதிக்கு விதித்து ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது. #NipahVirus

துபாய்,

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 13 பேர் இறந்தனர். நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 116 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பட்டுள்ளது. 15 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு கேரள மாநில பழங்கள், காய்கறிகள் இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்துவிதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த வாரம், கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம், சுற்றுலா பயணிகள், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது நினைவிருக்கலாம். 

Next Story