ஊதிய உயர்வு வழங்கக்கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்


ஊதிய உயர்வு வழங்கக்கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 31 May 2018 5:31 AM GMT (Updated: 31 May 2018 5:31 AM GMT)

ஊதிய உயர்வு வழங்கக்கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.#BankStrike

புதுடெல்லி,

சம்பள உயர்வு வேண்டும், தனியார் மயம் கூடாது, வங்கிகளை இணைக்கக்கூடாது, அன்னிய நேரடி முதலீட்டை வங்கித்துறையில் அனுமதிக்கக்கூடாது, வங்கிகளில் அவுட் சோர்ஸ் என்னும் அயலக சேவையை பெறுதல் கூடாது என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும், இன்றும் (புதன், வியாழக்கிழமை) 2 நாள் வேலை நிறுத்தம் செய்வதற்கு 9 வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி வேலை நிறுத்தம் நேற்று  நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சுமார் 85 ஆயிரம் வங்கிக்கிளைகள் மூடப்பட்டு இருந்தன. இதன்காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை முடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் சென்னையில் இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி கிளைகள் மூடப்பட்டு இருந்தன. 

இந்த வேலை நிறுத்தம் காரணமாக காசோலை பரிமாற்றங்கள் உள்ளிட்ட வங்கிப்பணிகள் முடங்கின. வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் பண பரிமாற்றங்கள் நடைபெறவில்லை. வங்கிப் பணிகள் நடைபெறவில்லை என்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.


Next Story