பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 காசு குறைந்தது


பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 காசு குறைந்தது
x
தினத்தந்தி 2 Jun 2018 3:51 PM GMT (Updated: 2 Jun 2018 3:51 PM GMT)

கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தலா 9 பைசா குறைந்துள்ளது. #Petroldiesel

புதுடெல்லி, 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வருகிறது. 

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை இன்று (சனிக்கிழமை) லிட்டருக்கு 9 காசு குறைந்தது. இதனால் சென்னையில் இன்று  ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81 ரூபாய் 19 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 97 காசாகவும் இருந்தது.

Next Story