பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட 9 பைசாவை பிரதமர் மோடிக்கு ‘செக்’காக அனுப்பிய இளைஞர்!


பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட 9 பைசாவை பிரதமர் மோடிக்கு ‘செக்’காக அனுப்பிய இளைஞர்!
x
தினத்தந்தி 5 Jun 2018 10:55 AM GMT (Updated: 5 Jun 2018 10:55 AM GMT)

பெட்ரோல் விலை 9 பைசாக்கள் குறைக்கப்பட்டதை அடுத்து இளைஞர் ஒருவர் அந்த பைசாவை செக்காக பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளார். #PMModi


ஐதராபாத்,

கர்நாடக மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் கணக்கில் வேகமாக உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெட்ரோல், டீசல் பைசா கணக்கில் குறைந்தது. ஏற்கனவே உயர்த்தும் போது மட்டும் ரூபாய் கணக்கில் செல்கிறது. சர்வதேச விலை குறையும் போது, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் போது மட்டும் பைசா கணக்கில் குறைக்கப்படுகிறது என்று விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் குறைவு காணப்படுகிறது. 

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 பைசா குறைக்கப்பட்டதும், அதே பைசாவை தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு செக்காக அனுப்பி உள்ளார். 

தெலுங்கானா மாநிலம் ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்த இளைஞர் சாந்து, பெட்ரோல் விலை உயர்வுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், குறைக்கப்பட்ட 9 பைசாவை பிரதமர் மோடிக்கு செக்காக அனுப்பி உள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற போது ஆட்சியரை சந்தித்த சாந்து, காசோலையை அவரிடம் ஒப்படைத்து உள்ளார், மேலும் காசோலை பிரதமர் மோடியை விரைவில் அடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.

Next Story