தேர்தலை குறிவைத்து மோடியின் கவர்ச்சித் திட்டங்கள் 50 கோடி மக்கள் பயன்பெறுவர்


தேர்தலை குறிவைத்து மோடியின் கவர்ச்சித் திட்டங்கள் 50 கோடி மக்கள் பயன்பெறுவர்
x
தினத்தந்தி 5 Jun 2018 11:00 AM GMT (Updated: 5 Jun 2018 11:00 AM GMT)

50 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் 2019 ஆம் ஆண்டு தேர்தலை கனக்கு வைத்து மத்திய அரசு திட்டமிடுகிறது. #PMModi

புதுடெல்லி

மக்களைவைத் தேர்தல் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் முயற்சிகளை தொடங்கியிருக்கின்றன. 

பாரதீய ஜனதா சமீபத்தில்  4 பாராளுமன்ற தொகுதிகளிலும், 11 சட்டசபை தொகுதிகளிலும் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்சரிவை சந்தித்துள்ளது. இதனால்  4 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும்  புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை விரைவில் அறிவிக்கவும் பிரதமர் திட்டமிட்டு உள்ளார்.

முதியோர் உதவித்தொகை, வாழ்நாள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான நலத்திட்டம் ஆகியவற்றை நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் நாட்டில் உள்ள 50 கோடி பொதுமக்கள் பயனடைய வாய்ப்புள்ளது. 

இத்திட்டங்களால் பாஜக எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தலில் ஆதாயம் அடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், இத்திட்டங்கள் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்றி, ஏற்கெனவே மோசமாக இருக்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேலும் சரிவை நோக்கி தள்ளும் அபாயமும் உள்ளது. நடைபெறும் பாராளுமன்றக் கூட்டத்தில் இதனைத் தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் மோடி கேர் என்ற பெயரில் மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது. இதுவே உலகின் மிகப்பெரிய மக்கள் நலத் திட்டம் என்றும் கூறப்பட்டது. 

Next Story