மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணிக்கு சமாஜ்வாடி தயார் அகிலேஷ் யாதவ்


மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணிக்கு சமாஜ்வாடி தயார் அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 6 Jun 2018 2:11 PM GMT (Updated: 6 Jun 2018 2:11 PM GMT)

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணிக்கு சமாஜ்வாடி தயார் என அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார். #AkhileshYadav


லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக களமிறங்கி வெற்றியை தனதாக்கி வருகிறது. இதேபோன்று 2019 பாராளுமன்றத் தேர்தலில் அங்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது, அதற்கான பணியும் தொடங்கிவிட்டது. தொகுதி பங்கீடு தொடர்பாக சரியான நேரத்தில் பகுஜன் சமாஜ் தலைவருடன் பேசுவேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே காங்கிரஸ் பணியை தொடங்கிவிட்டது.

தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கோரி உள்ளது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி, பாரதீய ஜனதாவிற்கு எதிராக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் வரிசையில் கூட்டணியாக போட்டியிட தயார் என அகிலேஷ் யாதவ் கூறிஉள்ளார். 
 
மத்திய பிரதேசத்தில் கூட்டணிக்கு தயாராக உள்ளோம். கூட்டணி அமைத்துக்கொள்ள முடியும் என்றால் 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அடிப்படையாகவும், நல்லதாகவும் அமையும், கூட்டணியும் வலுவடையும். இல்லையெனில் தனியாக செல்வோம் என கூறிஉள்ளார். கூட்டணிக்கான முயற்சி வெற்றியடையவில்லை என்றால் சமாஜ்வாடி கட்சி மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளிலும், சத்தீஷ்காரில் 90 தொகுதியிலும் தனியாக களமிறங்கும் எனவும் கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story