தேசிய செய்திகள்

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின்தரவரிசை பட்டியல்: 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம் + "||" + world's best universities Rank List

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின்தரவரிசை பட்டியல்: 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின்தரவரிசை பட்டியல்: 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்
உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன.
புதுடெல்லி, 

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை (2019-ம் ஆண்டுக்கானது) தயாரித்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்து உள்ளன.

அவை மும்பை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), பெங்களூரூ இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி), டெல்லி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகும்.

மும்பை ஐ.ஐ.டி. 17 இடங்கள் மேலே வந்து 162-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிடித்த இடத்தை டெல்லி ஐ.ஐ.டி. தக்க வைத்துக்கொண்டு உள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., 20 இடங்கள் முன்னேறி 170-வது இடத்தை கைப்பற்றி உள்ளது.

உலகின் 1000 தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவின் 24 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று உள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 பல்கலைக்கழகங்கள் அதிகம் ஆகும்.

சென்னை ஐ.ஐ.டி., தர வரிசையில் மாற்றம் இல்லை.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக பிடித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.