திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு சதி - முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு


திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு சதி - முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Jun 2018 5:44 AM GMT (Updated: 8 Jun 2018 5:44 AM GMT)

திருப்பதி கோவிலை கையகப்படுத்த மத்திய அரசு சதிதிட்டம் தீட்டுகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். #TirumalaTemple #ChandrababuNaidu​​​​​​​

அமராவதி,

சித்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு திருப்பதி கோவில் நிர்வாகத்தை கையகப்படுத்த சதிதிட்டம் தீட்டுகிறது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதிதிட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம். கோவிலை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சியை செய்கிறது. சதிதிட்டம் நிறைவேறாது. திருப்பதி பாலாஜியின் அருளால்தான் கடந்த 2003-ம் ஆண்டு பயங்கரமான தாக்குதலில் உயிர் தப்பினேன். கோவிலின் புனிதத்தை சிதைக்க அனுமதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை விமர்சனம் செய்த சந்திரபாபு நாயுடு, துரோகம் செய்துவிட்டது என கூறியுள்ளார். “ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டுக்கு டெல்லிக்கு சென்றேன், மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு நிதி கேட்டேன். ஆனால் அவர்கள் வழங்கவில்லை, மாறாக நமக்கு துரோகம் செய்துவிட்டார்கள்,” என குறிப்பிட்டார் சந்திரபாபு நாயுடு. 

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் கொண்டதாகவும் இருந்து வருகிறது. கோயிலின் நிர்வாகம் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாயிலாக நடந்து வருகிறது. சமீபத்தில் தேவஸ்தானத்திற்கு மத்திய தொல்லியியல் துறை எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் இருந்து எதிர்ப்பு எழவும் சர்ச்சைக்குரிய கடிதத்தை தொல்லியியல் துறை திரும்ப பெற்றது. 

Next Story