தேசிய செய்திகள்

காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் + "||" + Terrorists attack army patrol party in Jammu and Kashmir s Kupwara

காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். #KupwaraAttack

குபுவாரா,


  காஷ்மீரில் ரமலான் மாதத்தில் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்று பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. பயங்கரவாதிகள் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கவும், அப்பாவி மக்களை பாதுகாக்கவும் பாதுகாப்பு படைக்கு முழு உரிமையும் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பயங்கரவாதிகள் தரப்பில் கையெறி குண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு போன்ற தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று குபுவாரா மாவட்டம் ஹாரில் பகுதியில் ராணுவ பாதுகாப்பு ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய ஸ்ரீநகர் சென்று உள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் தேடிவருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி பலி
காஷ்மீரில், பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் பலியானார்.
2. காஷ்மீர்: 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீரில் நடந்த 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 31.3 சதவீத வாக்குகள் பதிவானது.
3. காஷ்மீரில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்: பயங்கரவாதிகள் நிறைந்த பகுதியில் வெறும் 8.3 சதவீத ஓட்டுப்பதிவு
காஷ்மீரில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில், பயங்கரவாதிகள் நிறைந்த பகுதியில் வெறும் 8.3 சதவீத ஓட்டுகளே பதிவானது.
4. 13 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் இன்று உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது
காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
5. காஷ்மீரில் இன்று உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதிகம் வாசிக்கப்பட்டவை