ம.பி.யில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு தானியம் மழையில் நனைந்து சேதம்


ம.பி.யில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு தானியம் மழையில் நனைந்து சேதம்
x
தினத்தந்தி 8 Jun 2018 6:24 AM GMT (Updated: 8 Jun 2018 6:41 AM GMT)

மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு தானியம் மழையில் நனைந்து சேதம் அடைந்து உள்ளது.

போபால்,

மழை காலங்களில் அரசு உணவு கிடங்குகளில் தானியங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைவது வழக்கமாக இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் விளைய வைக்கும் உணவு தானியங்களுக்கு நியாயமான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தாமோக் பகுதியில் உள்ள கொள்முதல் மையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட உனவுதானியம் மழையில் நனைந்து உள்ளது. மழையினால் மைய வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் தானியங்கள் மூழ்கியுள்ளது. கொண்டகடலை வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் தரப்பில், “தானியங்கள் பெரிதும் சேதம் அடையவில்லை, நாங்கள் தானியங்களை பாதுகாக்க பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மூடினோம், ஆனால் காற்றில் அவை  பறந்துவிட்டது,” என கூறியுள்ளார்கள்.

உணவு கிடைக்காமல் உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நிலையில் மற்றொரு பகுதியில் உணவு தானியங்கள் சேதம் அடையும் அவல நிலை தொடர்கிறது.

Next Story