தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஏ.சி வேலை செய்யாததால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு + "||" + 5 people died in a single day because AC did not work in government hospital

அரசு மருத்துவமனையில் ஏ.சி வேலை செய்யாததால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் ஏ.சி வேலை செய்யாததால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏ.சி வேலை செய்யாததால் ஒரே நாளில் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். #GovernmentHospital
கான்பூர்,

உத்திரபிரதேச மாநிலத்தின் கான்பூரில், கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து நோயாளிகள் ஏ.சி வேலை செய்யாததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


முன்னதாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் 4 குழந்தைகள் உட்பட 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக ஏ.சி இல்லாமல் நோயாளிகளால் இருக்க முடியவில்லை. நோயாளிகளின் உறவினர்கள் டேபிள் ஃபேன் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது.

இதையடுத்து புதன்கிழமை முதல் நேற்று நள்ளிரவு வரை ஏசி இல்லாமல் இருந்ததால் 5 பேர் உயிரிழந்ததாக  நோயாளிகளின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது. 2 நோயாளிகள் மாரடைப்பு காரணமாகவும், 2 நோயாளிகள் நாள்பட்ட நோய் காரணமாகவுமே உயிரிழந்தனர் என்றும், ஏசி இல்லாத காரணத்தால் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனையின் முதல்வர் நவ்னீத் குமார் கூறியுள்ளார். மேலும், நிர்வாகம் சார்பில், இந்திராபால் (75), கயா பிரசாத் (75), ரசுல் பாக்ஸ் (55), மற்றும் முராரி (56) ஆகியோர் இறந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, சில நோயாளிகள் வேறு சில மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த பழுதான ஏ.சி-யை சரி செய்யும் வரை தற்காலிகமாக இரண்டு ஏ.சிக்களை நிறுவ அதிகாரிகளுக்கு மாவட்ட மாஜிஸ்திரேட் சுரேந்திர சிங் உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்ட மாஜிஸ்திரேட், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொல்கத்தா அரசு மருத்துவமனையில் தீ விபத்து; நோயாளிகள் வெளியேற்றம்
கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
2. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் சாவு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் இறந்து விட்டார். இதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: சிறுமி பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சிறுமி பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Chhattisgarh
4. பழனி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
பழனி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை மாவட்டத்தில் முதல் முறையாக இங்கு செய்யப்பட்டுள்ளது.
5. அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.