தேசிய செய்திகள்

பென்சன் தராத அதிகாரி அலுவலகத்திற்கு பாம்புடன் சென்று மிரட்டிய ஓய்வு பெற்ற தொழிலாளி + "||" + Karnataka: Man seeking pension brings snake to office

பென்சன் தராத அதிகாரி அலுவலகத்திற்கு பாம்புடன் சென்று மிரட்டிய ஓய்வு பெற்ற தொழிலாளி

பென்சன் தராத அதிகாரி அலுவலகத்திற்கு பாம்புடன் சென்று மிரட்டிய ஓய்வு பெற்ற தொழிலாளி
பென்சன் தராத காரணத்தால், பாம்புடன் அலுவலகத்திற்கு சென்று ஓய்வு பெற்ற தொழிலாளி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரோனா

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் ரோனாவைச் சேர்ந்தவர் மாபு சாபா ரஜேகான்(68). இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று, பென்சன் வாங்கி வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் ரஜேகானிற்கு தொழு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

எனவே தனக்கு வரும் பென்சனைக் கொண்டே, சிகிச்சை பெற்றும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தும் வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 8 மாதங்களாக பென்சன் கிடைக்கவில்லை. 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம், வங்கி, தபால் நிலையத்திற்கு பலமுறை சென்று, புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

இந்நிலையில் தனது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது நல்ல பாம்பு ஒன்றை பிடித்து வந்து, பென்சன் வழங்கும் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யை மிரட்டி உள்ளார்

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரி, அறையில் இருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அதிகாரிகளிடம் பேசிய ரஜேகான், நான் எதை வைத்து சாப்பிடுவேன். என்னால் ஒருவேலையும் செய்ய முடியவில்லை. 

பென்சன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து 3 - 4 நாட்களில் பென்சன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி உறுதி அளித்துள்ளார்.