தேசிய செய்திகள்

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது + "||" + Vice President undergoes cataract surgery

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

ஐதராபாத்,

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் கண் சிகிச்சை மையம் ஒன்றில் கண் புரைக்கான அறுவை சிகிச்சையை இன்று செய்து கொண்டார்.

அவருக்கு மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா வடவள்ளி தலைமையிலான குழுவினர் இந்த சிகிச்சையை செய்து முடித்தனர்.  அதன்பின் துணை குடியரசு தலைவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அவர் மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.  இதனால் முன்னெச்சரிக்கைக்காக அவரை 3 நாட்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.