தொழிலதிபர்கள் 15 பேருக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


தொழிலதிபர்கள் 15 பேருக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jun 2018 10:21 AM GMT (Updated: 11 Jun 2018 10:21 AM GMT)

பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் நலன்களை புறக்கணித்து விட்டு ஒரு சிறு தொழிலதிபர் குழுவினருக்கு ரூ.2.5 லட்சம் கோடி அளவிற்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். #PMModi #RahulGandhi

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையை சேர்ந்த தொண்டர்கள் முன் இன்று உரையாற்றும்பொழுது, இந்தியாவில் திறமை உள்ளவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுவதில்லை.  விவசாயிகள் கடுமையாக உழைக்கிறார்கள்.  ஆனால் அவர்களை மோடிஜியின் அலுவலகத்தில் நீங்கள் காண முடியாது. என பேசினார்.

வங்கிகளில் வாரா கடன்களின் மதிப்பு ரூ.1,000 கோடிக்கு உயர்ந்துள்ளது.  தொழிலதிபர்கள் 15 பேருக்கு ரூ.2.5 லட்சம் கோடி வழங்கப்பட்டு உள்ளது.  ஆனால் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

தொழிலதிபர்கள் 15 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.  ஆனால் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு எதுவும் இல்லை.  அவர்களின் குழந்தைகள் அழுது கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.


Next Story