தேசிய செய்திகள்

ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள் இப்தார் விருந்து நடத்துவார்கள்; பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு + "||" + Only those "begging for vote" host Iftar parties, says TL BJP MLA

ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள் இப்தார் விருந்து நடத்துவார்கள்; பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள் இப்தார் விருந்து நடத்துவார்கள்; பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
தெலுங்கானாவில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள் இப்தார் விருந்து நடத்துவார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கோசமஹால் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. டி. ராஜா சிங் லோத்.  சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடுபவரான இவர், சமூக வலைதளமொன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அதில், ரமலான் மாதத்தில் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இப்தார் விருந்து நடத்துவதுபோல் நீங்களும் நடத்திடலாமே என நண்பர் ஒருவர் சிங்கிடம் கூறுகிறார்.

அதற்கு, தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் இப்தார் விருந்து நடத்துவதில் பரபரப்புடன் உள்ளனர்.  தொப்பிகளை அணிகின்றனர்.  செல்பி எடுத்து கொள்கின்றனர். 

ஓட்டு வாங்கி அரசியல் நடத்துவோரின் எண்ணமிது.  இப்தார் விருந்தில் கலந்து கொள்வோருடன் அமருபவர்கள் எல்லாம் ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள்.  எனது எண்ணம் வேறு என சிங் கூறியுள்ளார்.

இந்துத்துவம் ஒவ்வொருவரையும் மதிக்க கற்று கொடுக்கிறது.  ஆனால் சில மதங்கள் மற்றும் அவர்களின் மத புத்தகங்கள் இந்துக்களை கொல்ல வேண்டும் என போதிக்கிறது.  ஏனெனில் அவர்கள் காபிர் என கூறுகிறது.  இந்துக்களை கொல்ல வேண்டும் என பேசுபவர்களின் இப்தார் விருந்தில் எப்படி நான் கலந்து கொள்வது?  அல்லது அவர்களுக்காக நான் எப்படி இப்தார் விருந்து நடத்துவது? என்றும் அவர் கேட்டுள்ளார்.