தேசிய செய்திகள்

ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை பிரமாண்டமாக தயார் செய்த அம்பானி குடும்பம்!! + "||" + This is How Akash Ambani And Shloka Mehta's Wedding Invitation Card Looks Like

ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை பிரமாண்டமாக தயார் செய்த அம்பானி குடும்பம்!!

ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை பிரமாண்டமாக தயார் செய்த அம்பானி குடும்பம்!!
முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்வு வரும் 30ஆம் தேதி நடக்க உள்ளது. #AkashAmbani
புதுடெல்லி,

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி-நீதா அம்பானிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷாவும் இரட்டையர்கள். 3-வது ஆனந்த், இதில் ஆகாஷ் அம்பானிக்கு தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுடன் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த நிகழ்வு வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக அம்பானி குடும்பம் உற்சாகமாக தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் பெரிய பரிசு பெட்டி போன்ற வடிவத்தில் அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டுள்ளது . பெட்டியின் உள்ளே விநாயகர் இருப்பது போல வடிவமைக்கப்பட்ட இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு அழைப்பிதழ் தயாரிக்க மட்டும் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.  முன்னதாக அம்பானியின் குடும்பத்தினர் கோயிலுக்கு சென்று அழைப்பிதழை சுவாமியிடம் வைத்து வழிபாடு நடத்தினர்.

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.