ராகுல், மோடியை தொடர்ந்து வாஜ்பாயுடன் அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் நேரில் சந்திப்பு


ராகுல், மோடியை தொடர்ந்து வாஜ்பாயுடன் அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் நேரில் சந்திப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 4:14 PM GMT (Updated: 11 Jun 2018 4:14 PM GMT)

ராகுல்காந்தி, மோடியை தொடர்ந்து வாஜ்பாயுடன் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். #Vajpayee #AIIMS

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். வாஜ்பாய்யின் குடும்பத்தார்களுடன் சுமார் 50 நிமிடங்கள் உரையாடிய மோடி, மருத்துவர்களிடம் வாஜ்பாய்யின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். 

இந்நிலையில் வழக்கமான சோதனைக்காக வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 


Next Story