ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தவர்: தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது


ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தவர்: தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது
x
தினத்தந்தி 11 Jun 2018 11:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:37 PM GMT)

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தவர், தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

நொய்டாவை சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 7 கோடிக்கும் அதிகமானோர் இதில் முன்பதிவு செய்தனர். இந்நிறுவனம் வருமான வரித்துறையினர் சோதனைக்கும் ஆளானது. இந்த கம்பெனியின் நிறுவனர் மொகித் கோயல் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஒரு பெண், 5 தொழில் அதிபர்கள் தன்னை கற்பழித்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில் அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கற்பழிப்பு வழக்கை தீர்த்துவைப்பதாக மொகித் கோயல் உள்பட 3 பேர் டெல்லியில் ஒரு தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். இதுபற்றி அவர் நேதாஜி சுபாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மொகித் கோயல், கற்பழிப்பு புகார் கூறிய பெண் உள்பட 3 பேரும் ஓட்டலுக்கு வந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Next Story