தேசிய செய்திகள்

அரசியலமைப்பை அழிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரும்புகிறது ராகுல் காந்தி சாடல் + "||" + RSS wants to destroy Constitution Rahul Gandhi

அரசியலமைப்பை அழிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரும்புகிறது ராகுல் காந்தி சாடல்

அரசியலமைப்பை அழிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரும்புகிறது ராகுல் காந்தி சாடல்
அரசியலமைப்பை அழிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரும்புகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்து உள்ளார். #RahulGandhi #RSS #Congress


புதுடெல்லி,


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் வெறுப்புணர்வு கொள்கையை பின்பற்றுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படையான அமைப்பான சேவா தள் தொண்டர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சாதியின் அடிப்படையிலான பாகுபாடு மீது அதிதமான நம்பிக்கை உள்ளது. அவ்வமைப்பு பிறர் அனைவரது குரலையும் ஒடுக்க விரும்புகிறது, அரசியலமைப்பு அழிக்க விரும்புகிறது, அரசியலமைப்பு மையங்களின் சுதந்திரத்தை அழிக்க விரும்புகிறது என்று ராகுல் காந்தி பேசினார் என சேவா தள் அறிக்கை வெளியிட்டு உள்ளது.