வீணாகும் நீரை பயன்படுத்தி கொள்ள அரசின் காலக்கெடுவுக்கு முன் நெல் நாற்றுகளை நட்ட விவசாயி மீது வழக்கு பதிவு


வீணாகும் நீரை பயன்படுத்தி கொள்ள அரசின் காலக்கெடுவுக்கு முன் நெல் நாற்றுகளை நட்ட விவசாயி மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 12 Jun 2018 9:46 AM GMT (Updated: 12 Jun 2018 9:46 AM GMT)

பஞ்சாபில் வீணாகும் நீரை பயன்படுத்தி கொள்ள அரசின் காலக்கெடுவுக்கு முன் நெல் நாற்றுகளை நட்ட விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மொகா,

பஞ்சாபில் மொகா மாவட்டத்தில் சேகன் கலான் கிராமத்தின் முன்னாள் கிராம தலைவராக இருந்தவர் குர்மீத் சிங்.  இவர் வீணாகும் நீரை பயன்படுத்தி கொள்ளும் வகையில் தனது வயலில் நெல் நாற்றுகளை நட்டுள்ளார்.  இதனை மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

இவர் மீது மாநில அரசின் உத்தரவை மீறியுள்ளார் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  ஜூன் 20ந்தேதிக்கு முன் நெல் நாற்றுகளை நடுவதற்கு தடை விதித்து அரசு அறிவுறுத்தலை பிறப்பித்திருந்தது.

போலீசாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயி கைது செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

Next Story