தேசிய செய்திகள்

போர்நிறுத்தம் முடிந்தபின் முன்பை விட படையினர் கடுமையாக தாக்கினால் தீவிரவாதிகளே பொறுப்பு; உமர் அப்துல்லா + "||" + Militants to blame if forces hit them harder after peace initiative ends: Omar Abdullah

போர்நிறுத்தம் முடிந்தபின் முன்பை விட படையினர் கடுமையாக தாக்கினால் தீவிரவாதிகளே பொறுப்பு; உமர் அப்துல்லா

போர்நிறுத்தம் முடிந்தபின் முன்பை விட படையினர் கடுமையாக தாக்கினால் தீவிரவாதிகளே பொறுப்பு; உமர் அப்துல்லா
மத்திய அரசின் போர்நிறுத்தம் முடிந்த பின் பாதுகாப்பு படை முன்பை விட அதிக அளவில் தாக்குதல் நடத்தினால் அதற்கு தீவிரவாதிகள் தங்களையே திட்டி கொள்ள வேண்டும் என உமர் அப்துல்லா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,

ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை நடத்த வேண்டாம் என்று பாதுகாப்பு படையினருக்கு மத்திய அரசு கடந்த மே 16ந்தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.  ஆனால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையும் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

எனினும் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இரு தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன.  இந்த சம்பவங்களில் 2 போலீசார் கொல்லப்பட்டனர்.  மற்றும் 6 பாதுகாப்பு படை அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போர்நிறுத்த தோல்வியை உறுதி செய்ய சிறப்புடன் செயல்பட்ட தீவிரவாத அமைப்புகள், போர்நிறுத்தம் முடிந்தபின் முன்பை விட பாதுகாப்பு படையினரின் தாக்குதல் கடுமையானால் அதற்கு தீவிரவாதிகள் தங்களையே திட்டி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து, புல்வாமாவில் போலீசாரை கொன்றவர்கள் அணையாத நரகத்தின் நெருப்புக்கு செல்ல தகுதியானவர்கள்.  பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி பலியாகி உள்ளான். டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் காயம் அடைந்தனர்.
2. காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படை தாக்குதல்; 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரின் வடக்கே பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்து உள்ளார்.
5. தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு; கல்வீச்சில் ஈடுபட்ட 10 பேர் பாதுகாப்பு படையினர் சுட்டதில் காயம்
தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் சுட்டதில் 10 பேர் காயமடைந்து உள்ளனர்.