டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக கட்காரியுடன் பேசிவருகிறேன் - ரவிசங்கர் பிரசாத்


டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக கட்காரியுடன் பேசிவருகிறேன் - ரவிசங்கர் பிரசாத்
x
தினத்தந்தி 12 Jun 2018 11:32 AM GMT (Updated: 12 Jun 2018 11:32 AM GMT)

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக கட்காரியுடன் பேசிவருகிறேன் என ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார்.#Aadhaar #License #RaviShankarPrasad

புதுடெல்லி,
 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கியாஸ் மானியம் உள்பட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

மேலும் வங்கி கணக்கு, ‘பான்கார்டு’ செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. சட்டத்துக்குப் புறம்பாக தற்போது பலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்து உள்ளனர். விதிகளை மீறும் போது ஒரு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள், இவ்வாறு ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதை தடை செய்யும் வகையில், ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இந்நிலையில் டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக கட்காரியுடன் பேசிவருகிறேன் என ரவிசங்கர் பிரசாத் கூறிஉள்ளார். 

ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “டிரைவிங் லைசென்சுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக கட்காரியுடன் பேசிவருகிறேன், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒருவரை கொன்றுவிட்டு பிற மாநிலங்களுக்கு தப்பும்போது குற்றவாளி சிக்கிக்கொள்வார். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் கைரேகையை மாற்ற முடியாது,” என கூறிஉள்ளார். 

Next Story