ஜம்மு மற்றும் காஷ்மீரில் சாலையை சேதப்படுத்திய ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு


ஜம்மு மற்றும் காஷ்மீரில் சாலையை சேதப்படுத்திய ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு
x
தினத்தந்தி 12 Jun 2018 11:52 AM GMT (Updated: 12 Jun 2018 11:52 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அனுமதியின்றி 62 கி.மீ. தொலைவுக்கு சாலையை சேதப்படுத்தியதற்காக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது.

ஜம்மு,

நாட்டில் மிக பெரும் தொலை தொடர்பு நிறுவனங்களாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ முதல் சிந்தன் டாப் வரையிலான பகுதியில் அமைந்த சாலையில் கேபிள்கள் அமைப்பதற்காக 62 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது.  இதனை கவனத்தில் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் போலீசில் புகார் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து, சாலையை சேதப்படுத்தியதற்காக பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது.  அந்நிறுவனத்துடன் தொடர்புடைய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, இந்த நிறுவனங்களின் நிர்வாகத்தினர் அனுமதியின்றி விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலை 244ஐ சேதப்படுத்தி உள்ளனர்.  அது சாலை என்றில்லாமல் நீர் போக்குவரத்து பகுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Next Story