தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் பலி + "||" + Four Border Security Force (BSF) personnel have lost their lives in ceasefire violation by Pakistan in Chambliyal sector of Samba.

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் பலி

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். #JammuAndKashmir
ஸ்ரீநகர், 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்புக்கும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 3 வீரர்கள் காயம் அடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
2. தற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்: மெகபூபா முப்தி கருத்து
தற்கொலைக்கு சமம் எனத்தெரிந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம் என்று மெகபூபா முப்தி கருத்து தெரிவித்தார்.
3. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
4. பிடிபி, காங்கிரஸ், என்.சி.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயற்சி
பிடிபி, காங்கிரஸ், என்.சி.பி கட்சிகள் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. எல்லையில் தாக்குதல்: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
எல்லையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்காக, இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.