மகாராஷ்டிராவில் முதல் மந்திரி இல்லாத சூழலில் முடிவுகளை எடுக்க 3 பேர் கொண்ட அமைச்சரவை குழு அமைப்பு


மகாராஷ்டிராவில் முதல் மந்திரி இல்லாத சூழலில் முடிவுகளை எடுக்க 3 பேர் கொண்ட அமைச்சரவை குழு அமைப்பு
x
தினத்தந்தி 13 Jun 2018 10:03 AM GMT (Updated: 13 Jun 2018 10:03 AM GMT)

முதல் மந்திரி பட்னாவிஸ் இல்லாத சமயத்தில் நெருக்கடியான சூழலில் முடிவுகளை எடுக்க 3 பேர் கொண்ட அமைச்சரவை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது.  முதல் மந்திரி வெளிநாட்டிற்கு அலுவல்பூர்வ சுற்றுலா மேற்கொள்ளும் சமயத்தில், நெருக்கடியான சூழ்நிலையில் முடிவுகளை எடுப்பதற்காக 3 பேர் கொண்ட அமைச்சரவை குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டது

அதில், சந்திரகாந்த் பாட்டீல் (வருவாய் துறை மந்திரி), சுதீர் மங்கந்திவார் (நிதி மற்றும் திட்ட துறை மந்திரி) மற்றும் கிரிஷ் மகாஜன் (நீர்வள துறை மந்திரி) ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

இதுபற்றி பொது நிர்வாக துறை கடந்த ஜூன் 11ந்தேதி அரசு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.

அவர்கள். முதல் மந்திரி நாட்டில் இல்லாத சமயத்தில் நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில் முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story