தேசிய செய்திகள்

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை; அகிலேஷ் யாதவ் பேட்டி + "||" + I am not in race for PM post: Akhilesh

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை; அகிலேஷ் யாதவ் பேட்டி

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை; அகிலேஷ் யாதவ் பேட்டி
வருகிற 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் இன்று கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.  அவர் கூறும்பொழுது, பிரதமராக வேண்டும் என்ற நோக்கமோ அல்லது கனவோ எனக்கு இல்லை.  மாநிலத்தில் எக்ஸ்பிரெஸ் சாலை மற்றும் மெட்ரோ ஆகியவற்றை அமைப்பது என்ற கனவுடன் இருக்கவே நான் விரும்புகிறேன்.

வருகிற மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்க அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எனது தொண்டர்கள் இணைந்து பணியாற்றும்படி நான் கேட்டு கொண்டுள்ளேன்.  மத்தியில் எதிர்க்கட்சிகள் அதிகாரத்தினை பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி பிரதமர் பதவியை கோரும் சரத்பவார் சொல்கிறார்
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி பிரதமர் பதவியை கோரும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார்.
2. பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை, பா.ஜனதாவை ஆட்சியைவிட்டு நீக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் அதனை தேர்வு செய்யும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.