தேசிய செய்திகள்

காதலனுக்காக சிறைக்குள் போதை பொருள் கடத்திய கல்லூரி மாணவி கைது + "||" + College girl arrested for trafficking heroin in Dum Dum Central Jail

காதலனுக்காக சிறைக்குள் போதை பொருள் கடத்திய கல்லூரி மாணவி கைது

காதலனுக்காக சிறைக்குள் போதை பொருள் கடத்திய கல்லூரி மாணவி கைது
கொலை கைதியான காதலனுக்காக சிறைக்குள் போதை பொருள் கடத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு உள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பராசத் நகரில் நாபரா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மிதா மலாகர் (வயது 22).  கல்லூரி மாணவியான இவரின் காதலன் போகிராத் சர்கார்.

புர்த்வான் நகரில் பிஜ்பூர் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சர்கார் டம்டம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளான்.

தனது காதலனுக்கு தேவைப்பட்டது என்பதற்காக மலாகர் சிறைக்குள் ஹெராயின் என்ற போதை பொருளை கடத்தி கொண்டு சென்றுள்ளார்.  அவரை கைது செய்த போலீசார் சட்டவிரோத போதை பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

உயர் பாதுகாப்பு மிக்க சிறைக்குள் கஞ்சா, மதுபானம், செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் சமையல் பொருட்கள் கடத்த முயன்ற சிலரை கடந்த வெள்ளி கிழமை போலீசார் கைது செய்தனர்.