தேசிய செய்திகள்

வாஜ்பாய் உடல்நலம் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் சென்று விசாரிப்பு + "||" + About Vajpayee Health Kanimozhi MB went and inquired

வாஜ்பாய் உடல்நலம் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் சென்று விசாரிப்பு

வாஜ்பாய் உடல்நலம் குறித்து கனிமொழி எம்.பி. நேரில் சென்று விசாரிப்பு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

வாஜ்பாய் உடல்நலம் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகிறார்கள். அதன்படி, தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்த மூத்த தலைவர். வாஜ்பாயின் உடல்நலம் பற்றி அவரது வளர்ப்பு மகள் நமீதாவிடம் விசாரித்தேன். உடல்நிலை முன்பைவிட முன்னேறி இருப்பதாக அவரும், உறவினர்களும் தெரிவித்தனர். அவர் பூரண நலம் பெற, கருணாநிதி சார்பிலும், மு.க.ஸ்டாலின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்தேன்’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 13–ந் தேதி விழா கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்
சிறந்த பெண் எம்.பி. விருதுக்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 13–ந் தேதி அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்குகிறார்.
2. திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது; டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.
3. ‘ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல’ ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம்
ஒரு பெண்ணாக இருந்து அரசியலில், வெற்றி பெறுவது எளிதல்ல என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டி உள்ளார்.
4. தி.மு.க. ஆட்சி அமைக்க பெண்கள் பாடுபட வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
தி.மு.க. ஆட்சி அமைக்க பெண்கள் பாடுபட வேண்டும் என்று கலந்தாய்வு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
5. தேசிய ஓபன் தடகளம்: தமிழக வீராங்கனை கனிமொழி தங்கப்பதக்கம் வென்றார்
58–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.