தேசிய செய்திகள்

கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை ‘ஆராய்ச்சியில் ஈடு வேண்டிய கட்டாயம் இல்லை’ + "||" + Central government offer to college teachers

கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை ‘ஆராய்ச்சியில் ஈடு வேண்டிய கட்டாயம் இல்லை’

கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சலுகை ‘ஆராய்ச்சியில் ஈடு வேண்டிய கட்டாயம் இல்லை’
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

புதுடெல்லி,

மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் (ஏ.பி.ஐ.) முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் இனி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம் இல்லை. ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்பது கல்லூரி ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது ஆகும். இந்த நடவடிக்கையால் பட்ட வகுப்பு ஆசிரியர்கள், இனி பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியும்’’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘கல்லூரிகளில் உதவி பேராசிரியர் (செலக்சன் கிரேடு) பதவி உயர்வுக்கு 2021 ஜூலை மாதம் முதல் முனைவர் (பி.எச்.டி.) பட்டம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல்கலைக்கழகங்களில் நேரடியாக உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்படுவதற்கும் முனைவர் பட்டம் 2021 ஜூலை மாதம் கட்டாயம் ஆகிறது’’ என்று கூறினார்.

மேலும், பல்கலைக்கழக மட்டத்திலான ஆசிரியர்களுக்கு (அதாவது, முதுநிலை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறவர்களுக்கு) கல்வி செயல்திறன் குறிகாட்டிகள் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.