தேசிய செய்திகள்

ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 1 Army jawan, 2 terrorists killed in ongoing operation in J&K

ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்முவிலுள்ள பந்திபோரா வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். #JammuEncounter
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்திலுள்ள பனார் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் என்கவுண்டர் நடத்தினர்.

இது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...