தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி + "||" + Modi congratulates Afganistan cricket team

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி
இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #ModiTweetonAfghanistanTeam
புதுடெல்லி,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

”தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை ஆப்கானிஸ்தான் அணி இந்திய மண்ணில் விளையாட தேர்வு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இரு அணிகளுக்கும் என் சிறந்த வாழ்த்துக்கள். இந்த விளையாட்டு போட்டியின் மூலம் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவு மிகவும் வலுப்படும்” என தெரிவித்துள்ளார்.