தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் இடி மற்றும் கனமழைக்கு 10 பேர் பலி, 28 பேர் படுகாயம் + "||" + In Uttar Pradesh, 10 people were killed by Thunder hit and 28 others injured

உத்தரப்பிரதேசத்தில் இடி மற்றும் கனமழைக்கு 10 பேர் பலி, 28 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் இடி மற்றும் கனமழைக்கு 10 பேர் பலி, 28 பேர் படுகாயம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய பலத்த மழைக்கு 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர். #UPThunderStorm
லக்னோ,

கர்நாடகம், கேரளா மற்றும் தமிழத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

முன்னதாக, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் புழுதி புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என லக்னோ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சீதாபூர் பகுதியில் பெய்த கனமழையினால் இடி தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் கொன்டா பகுதியில் 3 பேரும், ஃபைசாபாத்தில் ஒருவரும் இடி தாக்கி உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக கடந்த 2-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி தாக்கி 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.