ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்


ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்
x
தினத்தந்தி 14 Jun 2018 6:44 AM GMT (Updated: 14 Jun 2018 6:44 AM GMT)

ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். #KejriwalWritesToModi

புதுடெல்லி,

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருகிறது என குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் கெஜ்ரிவால், ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை அண்மையில் துவங்கி வைத்தார். ஆனால், முதல்வரின் உத்தரவை செயல்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மறுத்து வந்தனர். அதேபோல், தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு பிறகு, அமைச்சர்களுடனான கூட்டத்தையும் ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்து வந்தனர். இதனால், பணியை புறக்கணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  துணை நிலை ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். 

இதற்காக, துணைநிலை கவர்னர், அனில் பைஜாலை சந்திப்பதற்காக, முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்களுடன், கடந்த 11-ந் தேதி மாலை, கவர்னர் மாளிகை சென்றார். ஆனால், கவர்னர் அனுமதி தரவில்லை. அதனால், கவர்னர் மாளிகையின் வரவேற்பாளர் அறையில், பல மணி நேரம் காத்திருந்தார். அவருடன், மாநில அமைச்சர்களும் வந்தனர். எனினும், கவர்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, 'கவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்' எனக் கூறி, கெஜ்ரிவால், வரவேற்பு அறையிலேயே அமர்ந்து, தர்ணா போராட்டம் நடத்தினார். கெஜ்ரிவாலும், அமைச்சர்களும், வரவேற்பு அறையிலேயே படுத்து உறங்கினர். 

இந்நிலையில் 4-வது நாளாக தர்ணா போராட்டத்தை நீடித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால், ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Next Story