தேசிய செய்திகள்

70 ஆண்டுகளுக்கு மேலாக காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழும் துறவி + "||" + This Yogi Claims To have Survived Without Food, Water For Over 70 Years

70 ஆண்டுகளுக்கு மேலாக காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழும் துறவி

70 ஆண்டுகளுக்கு மேலாக காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழும் துறவி
குஜராத் மாநிலத்தில் பிரஹலாத் ஜனி என்ற துறவி 75 ஆண்டுகளுக்கு மேலாக காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
மும்பை,

ஒரு வேளை உணவு அல்லது இரு வேளை சாப்பிடவில்லை என்றாலே பலருக்கு கிறுகிறுவென வந்து விடுகிறது. இந்தநிலையில்  குஜராத் மாநிலம்  மெஹ்சனா மாவட்டம் சரோட் என்ற கிராமத்தை சேர்ந்த பிரஹலாத் ஜனி (வயது 88) என்ற துறவி ஒருவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக   உணவு அருந்தாமல்  தண்ணீர் குடிக்காமல் காற்றை மட்டும் சுவாதித்து உயிர் வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

இது குறித்து பிரஹலாத் ஜனி கூறுகையில்,

கடவுளின் அருளால் தமக்கு இந்த சக்தி கிடைப்பதாகவும், அதனால் உணவு தண்ணீர் தேவை இல்லை என கூறுகிறார்.

இவரை பரிசோதனை செய்த விஞ்ஞானிகள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என பல முறை இவரை தொடந்து கண்காணித்துள்ளனர். துளியும் உணவு, தண்ணீர் அருந்தாமல், இருப்பதை பார்த்து வியந்துள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் நடந்தே செல்வது, தொடர்ந்து பல மணி நேரங்கள் தியானங்கள் செய்வது, தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு ஆசி வழங்குவது என அவரது பயணம் தொடர்கிறது.  குஜராத் மக்கள் இவரை மாதாஜி என்று அழைக்கின்றனர். 

இவரிடம் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் ஆசி பெற்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.