தேசிய செய்திகள்

டெல்லியில் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை ஆளுநர் உத்தரவு + "||" + Dust pollution: L-G Baijal bans construction activities in Delhi till June 17

டெல்லியில் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை ஆளுநர் உத்தரவு

டெல்லியில் வரும்  17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை ஆளுநர் உத்தரவு
டெல்லியில் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாயகர நிலைக்கு சென்றுள்ளது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசிவருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 8 மடங்கு மாசு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இன்னும் சில நாட்களுக்கு மாசு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், டெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு நிலவுவதால் வரும் 17-ம் தேதி வரை கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.