தேசிய செய்திகள்

நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி வழங்குகிறார் + "||" + Actor Amitabh Bachchan gives Rs 2 crore to finance

நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி வழங்குகிறார்

நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி வழங்குகிறார்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதியை ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்

மும்பை,

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் அவர் நாட்டைக் காக்கும் பணியின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ரூ. 1 கோடியும், கடன்களால் அல்லாடி வருகிற விவசாயிகள் கடன்களை திரும்பத் தருவதற்கு ரூ. 1 கோடியும் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல்களை நடிகர் அமிதாப்பச்சன் இப்போது உறுதி செய்து உள்ளார்.

இது பற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், ‘‘ ஆமாம், என்னால் முடியும். நான் செய்வேன்’’ என கூறி உள்ளார்.

இதில், பண உதவி உண்மையாகவே தேவைப்படுவோரை சென்று அடைவதை உறுதி செய்யும் தொண்டு அமைப்புகளை கண்டறிந்து பட்டியல் அளிக்குமாறு ஒரு குழுவை அமிதாப்பச்சன் அமர்த்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இது பற்றி அவர் டுவிட்டர் பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.தொடர்புடைய செய்திகள்

1. பாலஸ்தீனியர்களுக்கான நிதி உதவி நிறுத்தம் - அமெரிக்கா திடீர் முடிவு
பாலஸ்தீனியர்களுக்கான நிதி உதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
2. விவசாய வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி உதவி நடிகர் சூர்யா வழங்கினார்
விவசாய வளர்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி உதவியும், விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் நடிகர் சூர்யா வழங்கினார்.
3. கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி டன்னுக்கு ரூ.55 நேரடியாக வழங்கப்படும்
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி டன்னுக்கு ரூ.55 நேரடியாக வழங்கப்படும்.