தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு + "||" + Kamal Hassan supported Arvind Kejriwal

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்து டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தன்னுடைய 3 மந்திரிகளுடன் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது அல்ல. டெல்லியிலும், புதுச்சேரியிலும் நடக்கும் வி‌ஷயங்களில் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பான மாற்றத்தை விரும்பும் மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்’’ என்று கூறியுள்ளார்.

இதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலுபிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதாதள அதிருப்தி தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.