தேசிய செய்திகள்

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு சிறை; இந்தியா கடும் அதிருப்தி + "||" + Prisoner of former president of Maldives India is deeply dissatisfied

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு சிறை; இந்தியா கடும் அதிருப்தி

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு சிறை; இந்தியா கடும் அதிருப்தி
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவில் கடந்த சில மாதங்களாக அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

 நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்தியதாக முன்னாள் அதிபர் மம்னூன் அப்துல் கயூம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சயீத் ஆகியோருக்கு 19 மாத சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த விவகாரம் மாலத்தீவு அரசியலில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனின் திட்டப்படியே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டு உள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாலத்தீவு முன்னாள் அதிபர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு, உரிய விசாரணை எதுவுமின்றி நீண்டகால சிறைத்தண்டனை விதித்து இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது மாலத்தீவு அரசின் சட்டத்தின் ஆட்சி மீதும், வருகிற அதிபர் தேர்தல் மீதான நம்பகத்தன்மை மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு, நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல்சாசன நிறுவனங்களின் சுதந்திரமான செயல்பாட்டை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ள வெளியுறவு அமைச்சகம், அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
2. மாலத்தீவு : தேர்தல் முடிவை எதிர்த்த அதிபரின் மனு மீதான விசாரணை துவக்கம்
மாலத்தீவு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த அதிபர் அப்துல்லா யாமீன், தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
3. துருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை
துருக்கியில் சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார்.
4. அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க யாமீன் திட்டம்: மாலத்தீவு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க யாமீன் திட்டமிட்டுள்ளதாக மாலத்தீவு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
5. கோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை
கோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.