தேசிய செய்திகள்

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி + "||" + 5 dead, including children in landslides in Kerala

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் இறந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

கோழிக்கோடு,

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது.

தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிரிடப்பட்ட பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 5 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் மாயமானார்கள். இதையடுத்து சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அதிகாலை அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது பற்றி அறிந்த முதல்–மந்திரி பினராயி விஜயன் மீட்பு பணிகளை விரைந்து செய்யுமாறு மந்திரிகள், தலைமை செயலாளர், கலெக்டர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு அறிவுறுத்தினார். கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நிலச்சரிவால் கோழிக்கோடு–கொள்ளேகால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பலத்த மழை, நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் தங்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்
கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
2. ‘தித்லி’ புயல்: ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் சாவு; 4 பேர் மாயம்
தித்லி புயலை தொடர்ந்து கனமழை காரணமாக, ஒடிசாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலியானதுடன், 4 பேர் மாயமாகி உள்ளனர்.
3. கனமழை எதிரொலி: கேரளாவில் 11 அணைகள் திறப்பு
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 11 அணைகள் திறக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை: இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
கேரளா தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
5. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பேராயர் மூலக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிப்பு
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பேராயர் மூலக்கல்லின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.