15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு


15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு
x
தினத்தந்தி 17 Jun 2018 12:29 PM GMT (Updated: 17 Jun 2018 12:29 PM GMT)

15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என யோங் மிசோ சங்கம் அறிவித்துள்ளது.

ஐஸ்வால்:

இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த யோங் மிசோ சங்கம் என்ற அமைப்பு  தங்கள் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

யோங் மிசோ சங்கம் இது குறித்து கூறிகையில்,

இயற்கை சூழலுடன் பசுமையான நிலப்பகுதி கொண்ட மிசோராமில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடிபெயர்ந்து வருவதாக புகார்
எழுந்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  அதன் மூலம் தொழில் வளம் உயரும் என்றும் தெரிவித்துள்ளது. 

யோங் மிசோ சங்கத்தின் தலைவர் வன்லால் ருதா கூறிகையில்.

இந்தியாவிலேயே மக்கள் அடர்த்தி குறைவான மாநிலங்களில் 2-வது இடத்தை மிசோரம் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் அருணாசல பிரதேசம் இருக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் ஒரு சதுர கி.மீட்டர் பரப்பளவில் 52 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இந்தியாவில் தேசிய சராசரிப்படி சதுர கி.மீட்டருக்கு 382 பேர் வசிக்கின்றனர். மிசோராமில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக இருப்பதால் மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது வங்காள தேசத்தில் இருந்து அசாம் வழியாக ஏராளமானோர் குடியேறுகிறார்கள். அதே போல் மியான்மர் நாட்டில் இருந்தும் இங்கு சட்ட விரோதமாக குடியேறுகின்றனர்.

இந்த மாநிலத்தில் ஏராளமான நிலப்பரப்பு இருப்பதால் அவர்கள் இங்கு குடியேறி ஆக்கிரமித்து கொள்ளும் நிலை இருக்கிறது. இந்த குடியேற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் எங்கள் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும். இதற்காகத்தான் எங்கள் பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story