தேசிய செய்திகள்

நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம் + "||" + IAS Officers Go Public With Charges Against Kejriwal Govt, Accuse AAP of Spreading Lies

நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்

நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்
நாங்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளோம் என்பது உண்மை கிடையாது, அரசியலுக்காக நாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என ஐஏஎஸ் சங்கம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகையில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். 

போராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அக்கட்சியின் தொண்டர்கள் பிரதமர் வீடு நோக்கி பேரணியை மேற்கொண்டுள்ளார்கள். 
இந்நிலையில் டெல்லி ஐஏஎஸ் சங்க உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்கள். ஐஏஎஸ் சங்கத்தை சேர்ந்த மணிஷா சக்சேனா பேசுகையில், “நாங்கள் வேலை நிறுத்தம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்து உள்ளார்கள் என்ற செய்தியே முதலில் தவறானது, அடிப்படையற்றது. நாங்கள் அரசின் அனைத்து கூட்டங்களிலும் கலந்துக்கொள்கிறோம். அனைத்து துறைகளும் அவர்களுடைய பணிகளை செய்கிறது. நாங்கள் சில நேரங்களில் விடுமுறை நாட்களில் கூட வேலை செய்கிறோம்.” என கூறிஉள்ளார். 

மற்றொரு அதிகாரி வர்ஷா ஜோஷி பேசுகையில், “எங்களுடைய பணியை நாங்கள் செய்வோம், நாங்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளோம், பாதிக்கப்பட்டு உள்ளோம். முழுவதும் அரசியல் காரணத்திற்காக நாங்கள் பயன்படுத்தப்படுகிறோம்,” என கூறியுள்ளார். 

 “எல்லாம் எங்களுடைய கட்டுப்பாட்டில் கிடையாது, நாங்கள் அரசியலமைப்புபடி எங்களுடைய பணியை செய்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார் மணிஷா சக்சேனா. 

“ஐஏஎஸ் அதிகாரிகள் செய்யும் பணிகள் பொதுமக்களுக்கு தெரியாது. இப்போது எழுந்து உள்ள நிலை எங்களுக்கு இயல்பானது கிடையாது. நாங்கள் இலக்காக்கப்பட்டு உள்ளோம், கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.