தேசிய செய்திகள்

மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது! + "||" + Odisha man walks 1,350 km to meet PM Modi, finds support from Rahul Gandhi instead

மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது!

மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது!
மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். #PMModi #RahulGandhi

புதுடெல்லி,


ஓடிசா மாநிலம் ரூர்கேலாவை சேர்ந்த முக்திகாந்த் பிஸ்வால் (வயது 30) என்பவர் பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியை அவருக்கு நியாபகப்படுத்த டெல்லியை நோக்கி கடந்த ஏப்ரல் மாதம் நடைபயணத்தை தொடங்கினார். 1,350 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்ற போது ஆக்ரா நெடுஞ்சாலையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. சிற்பியாக இருக்கும் பிஸ்வால் பேசுகையில், 

“என்னுடைய கிராம மக்கள் மருத்துவ தேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேறுவதற்காக காத்திருக்கிறார்கள். 


கடந்த 2015-ம் ஆண்டு அவற்றைச் சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இப்போது வரையில் உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காததால் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல், பிராஹ்மனி பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடிக்கவும், இஸ்பாத் பொது மருத்துவமனையை தரம் உயர்த்தவும் கோரி பிரதமர் மோடியை நான் நேரில் சந்தித்து வலியுறுத்த விரும்புகிறேன். நாட்டில் உள்ள எல்லோருக்கும் முறையான அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் படும் சிரமங்களைப் பார்த்து, இந்த நடைப்பயணத்தை மேற்கொள்ள தொடங்கினேன்,” என்றார். 

ரூர்கேலாவில் போதிய மருத்துவமனை வசதியில்லாமல் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முக்திகாந்த் பிஸ்வாலுக்கு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும் என கூறியுள்ளார். 
 
“ரூர்கேலாவில் நவீன மருத்துவமனை அமைக்கப்படும் என பிரதமர் மோடி மூன்று வருடங்களுக்கு முன்னதாக வாக்குறுதியளித்துள்ளார். மோடி தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் பிஸ்வால் இப்போது 1,300 கிலோ மீட்டர் டெல்லியை நோக்கி நடந்துள்ளார், மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். பிஸ்வாலுக்கு நான் உறுதியளிக்கிறேன்: இந்திய மக்களும் காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடி அவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ,” என டுவிட்டரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.