ஜெய்பூர் - மும்பை இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு என புரளி, அதிகாரிகள் விசாரணை


ஜெய்பூர் - மும்பை இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு என புரளி, அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 19 Jun 2018 4:57 AM GMT (Updated: 19 Jun 2018 4:57 AM GMT)

ஜெய்பூர் - மும்பை இடையிலான இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது புரளி என தெரியவந்துள்ளது.


புதுடெல்லி,

இண்டிகோ சேவை மையத்திற்கு இன்று காலை 5:30 மணியளவில் மர்மநபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்த நபர் ஜெய்பூர் - மும்பை இடையில் சேவையில் இருக்கும் 6E 218 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அழைப்பு வருவதற்கு முன்னதாக விமானம் புறப்பட்டுவிட்டது. 5:05 மணிக்கு ஜெய்பூரில் இருந்து புறப்படும் விமானம் காலை 7 மணிக்கு மும்பையை சென்றடையும், அதன்படி விமானம் சென்றடைந்தது. இதற்கிடையே விமான நிறுவனம் வெடிகுண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு குழுவிற்கு அழைப்பு விடுத்தது, விதிமுறைகளின்படி தகவல் தெரிவித்தது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் புரளி என தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். 


Next Story