சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்


சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்
x
தினத்தந்தி 20 Jun 2018 6:16 AM GMT (Updated: 20 Jun 2018 6:16 AM GMT)

சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கேங்டாக்,

சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில் ஜனவரியில் சிக்கிம் மாநில சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான தூதுவராக ரகுமான் நியமிக்கப்பட்டார்.  சிக்கிமில் நடந்த குளிர்கால திருவிழா ஒன்றில் முதல் மந்திரி பவன் சாம்லிங்கால் ரகுமான் கவுரவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிக்கிம் அரசின் மாநில தூதுவராக ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

சிக்கிமின் சாதனைகளை தேசிய அளவில் மற்றும் உலக அளவில் கொண்டு செல்லும் பணியை ரகுமான் மேற்கொள்வார் என தலைமை செயலாளர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story