தேசிய செய்திகள்

சிறுமியின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு + "||" + Avoidance of major train accident by the girl's intelligence

சிறுமியின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

சிறுமியின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
திரிபுராவில் 9 வயது சிறுமியின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. #Tripura
அகர்தலா,

பழங்குடி இனத்தினைத் சேர்ந்த 9 வயதான சிறுமி சுமதி திரிபுராவின் தன்சேரா பகுதியில் வசித்து வருகிறார். அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் அவரின் குடும்பத்தினருடன் ஈடுபட்டிருந்தார்.

ஏற்கனவே கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால் பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது மண்சரிவை அறியாத நிலையில் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக அகர்தலாவுக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.


ரயில் வருவதை கவனித்த சிறுமி சுமதி உடனடியாக தனது சட்டையைக் காட்டி ரயிலை நிறுத்துமாறு சைகை செய்தார். இதனை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். சிறுமி சுமதியின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பயணம் செய்த 2000க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.

சிறுமியின் செயலை பாராட்டி, அவரின் பெயரை ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்யவும், அந்த சிறுமியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. பழங்குடியின சமூக நலத்துறை அமைச்சர் மேவார் குமார் ஜமாடியா சிறுமியின் தந்தையிடன் ரூ .50,000 வழங்கினார். ரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.தொடர்புடைய செய்திகள்

1. சாலையில் கிடந்த பொம்மை கார்; எடுத்து விளையாடியதில் வெடித்து சிறுமி மற்றும் தாயார் காயம்
அசாமில் சாலையில் கிடந்த பொம்மை காரை எடுத்து வீட்டில் வைத்து விளையாடியபொழுது வெடித்ததில் சிறுமி மற்றும் தாயார் காயமடைந்தனர்.
2. காஷ்மீரில் நில சரிவு: 9 வயது சிறுமி பலி, 3 பேர் காயம்; 200 பேர் மீட்பு
காஷ்மீரில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பலியானாள். அவரது குடும்பத்தின் 3 பேர் காயமடைந்தனர்.
3. வில்லேபார்லேயில் கிணற்றுக்குள் விழுந்து சிறுமி, 2 பெண்கள் பலி
வில்லேபார்லேயில் பூஜை செய்த போது கிணற்றுக்குள் விழுந்து சிறுமி உள்பட 2 பெண்கள் பலியாகினர்.
4. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இணையதளத்தில் வீடியோ வெளியிட்ட வாலிபர்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிட்ட வாலிபரை கடலூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
5. சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தின் கீழ் ஜோதிடர் கைது
கும்பகோணம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோதிடர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.