9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு


9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 22 Jun 2018 1:42 PM GMT (Updated: 22 Jun 2018 1:42 PM GMT)

9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி, 


காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இப்போது 9 உறுப்பினர்கள் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆணையத்தின் உறுப்பினர்களின் பெயரை மத்திய அரசு இறுதி செய்தது. கர்நாடகா தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. கர்நாடகம் மட்டும் அதன் உறுப்பினர்களை இன்னும் நியமிக்கவில்லை. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட உள்ளது.

 ஆணையம் டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறையின் நிர்வாக செயலாளரான (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story