தேசிய செய்திகள்

பா.ஜ.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை + "||" + BJP Worker Hacked To Death

பா.ஜ.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

பா.ஜ.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை
கர்நாடகாவில் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். #Karnataka
சிக்மங்களூர்,

கர்நாடகாவில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்தவர் முகமது அன்வர்(44). இவர் சிக்மங்களூர் புறநகர் பா.ஜ.க. பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அன்வர் நேற்றிரவு கவுரி கால்வாய் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அன்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அன்வர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அன்வரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்வர் சமீபத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்காக பல பணிகளை மேற்கொண்டார். இதனால் ஏற்பட்ட அரசியல் போட்டி காரணமாக கூட இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த படுகொலை சம்பவத்திற்கு பா.ஜ.க.  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.